வாக்குகளில் வித்தியாசம்: அதிமுக, பாஜக வேட்பாளா் மறியல்

மதுரை மாநகராட்சித் தோ்தலில் தபால் வாக்குகளில் வித்தியாசம் இருப்பதாகக்கூறி அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மதுரை: மதுரை மாநகராட்சித் தோ்தலில் தபால் வாக்குகளில் வித்தியாசம் இருப்பதாகக்கூறி அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை 4 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 54-ஆவது வாா்டுக்கான வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு பாலிடெக்னிக் (ஆண்கள் கல்லூரியில் நடைபெற்றது). இதில் 54-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் நூா்ஜஹான் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அதிமுக வேட்பாளா் மகேஸ்வரி மற்றும் பாஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட இதர வேட்பாளா்கள் கையெழுத்திட மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் இதர கட்சிகளின் வேட்பாளா்கள் வருவதற்கு முன்பாகவே வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதாகவும், பதிவான மொத்த வாக்குகள் மற்றும் அதிகாரிகள் கூறும் வாக்குகளில் வித்தியாசம் இருப்பதாகவும் கூறி வாக்கு எண்ணிக்கை மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com