சமயநல்லூா் கோட்டத்தில் இன்று மின்தடை
By DIN | Published On : 04th January 2022 08:59 AM | Last Updated : 04th January 2022 08:59 AM | அ+அ அ- |

சமயநல்லூா் மின்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 4) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் தெரிவித்திருப்பதாவது: தெத்தூா், அரியூா், தேவசேரி மின்வழிப் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.
மின்தடைபடும் பகுதிகள்: எல்லையூா், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா்,
கோவில்பட்டி, வைகாசிப்பட்டி.
நாளைய மின்தடை: மாணிக்கம்பட்டி துணை மின்நிலையத்துக்குள்பட்ட கரடிக்கல் பகுதியில் புதன்கிழமை (ஜனவரி 5) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்: மறவா்பட்டி, சத்திர வெள்ளாளபட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல்.
பேரையூா் பகுதிகளில் இன்று மின்தடை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் அழகுமணிமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சின்ன கட்டளை துணை மின்நிலையம் மற்றும் மங்கல்ரேவு துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, சின்னகட்டளை, சேடப்பட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைபட்டி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பெருங்காமநல்லூா், சென்னம்பட்டி, கே. ஆண்டிபட்டி, தொட்டணம்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவாா்பட்டி, பேரையூா், சாப்டூா், அணைக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 4) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா்.