மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் இலங்கைக்கு மண்ணெண்ணெய் அடுப்பில் மறைத்து கொண்டு சென்ற ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்.
மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்.

மதுரை விமான நிலையத்தில் இலங்கைக்கு மண்ணெண்ணெய் அடுப்பில் மறைத்து கொண்டு சென்ற ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளில் ஒருவர் விலை உயர்ந்த போதைப் பொருள் கடத்த இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் சோதனையிட்டனர். 

அதில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவஹர் என்பவரது மகன் ஷகில் அஹமது(28). உடமைகளை சோதனையிட்டபோது அவரது பையில் மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றை வைத்திருந்தார். அதனைப் பிரித்து சோதனையிட்ட போது அடுப்பின் அடிப்பகுதியில் அபிடமிஸ் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரை கிலோ எடையில் இருந்த அந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 2 கோடி வரை இருக்கும் என சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஷகில் அகமது விடம் விசாரித்தபோது மதுரை விமான நிலைய வாசலில் அறிமுகமில்லாத நபர் ஒருவர் இந்த அடுப்பை இலங்கைக்கு சேர்த்து விடும்படி தன்னிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சுங்கத்தறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் திருமால் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஷகில் அகமதுவிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் கொண்டு வந்த போதைப் பொருளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com