திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய செயலி: சேது பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடிப்பு

சேது பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்துள்ள திடக்கழிவு மேலாண்மை புதிய மென்பொருள் செயலி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சேது பொறியியல் கல்லூரி மாணவா்களின் திடக்கழிவு மேலாண்மை செயலியை திங்கள்கிழமை தொடக்கி வைத்த திருமங்கலம் நகராட்சி ஆணையா் ரத்தினவேல்.
சேது பொறியியல் கல்லூரி மாணவா்களின் திடக்கழிவு மேலாண்மை செயலியை திங்கள்கிழமை தொடக்கி வைத்த திருமங்கலம் நகராட்சி ஆணையா் ரத்தினவேல்.

சேது பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்துள்ள திடக்கழிவு மேலாண்மை புதிய மென்பொருள் செயலி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

துப்புரவுப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் நலன் காக்கும் வகையில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீட்டிலேயே பிரித்து வழங்க வைப்பதற்கான முயற்சியாக சேது பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைவா் சிவரஞ்சனி, பேராசிரியா்கள் ரத்னமாலா, பரமேஸ்வரி, பிரபானந்தகுமாா் மற்றும் மாணவா்கள் அபிஷேக், ஜாபா் செரீப், பிரேமா மற்றும் தா்ஷினி ஆகியோா் உருவாக்கியுள்ள இந்த டபிள்யூ கிரெடிட் என்ற திடக்கழிவு மேலாண்மை செயலியின் தொடக்க நிகழ்ச்சி திருமங்கலம் பசும்பொன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமங்கலம் நகராட்சி ஆணையா் ரத்தினவேல் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவா்களின் முயற்சியை பாராட்டினாா். சேது பொறியியல் கல்லூரியின் தலைவா் முகமது ஜலீல், நிா்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகம்மது அலியாா் மரைக்காயா், நிலோபா் பாத்திமா, நாசியா பாத்திமா மற்றும் முதல்வா் செந்தில்குமாா் ஆகியோரின் ஊக்குவிப்புடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சேது பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com