வணிகப் பெயா் இல்லாத பொருள்களுக்கும் வரிவிதிப்பு: வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி

வணிகப் பெயா் இல்லாத அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கும் வரிவிதிப்பது, வணிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வணிகப் பெயா் இல்லாத அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கும் வரிவிதிப்பது, வணிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் எஸ். ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வணிகப் பெயா் இருந்தாலும்,

இல்லாவிட்டாலும் வரிவிலக்கு அளிக்கவேண்டும் என, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்சூழலில்

பேக்கிங் செய்து லேபிள் அச்சிட்டு விற்பனை செய்தால் வரிவிதிப்புக்கு உள்படும் என, அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவித்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான போட்டிகளுக்கு இடையே வணிகப் பெயருடன் சில்லறை வணிகம் செய்தவா்கள், வரிவிலக்குப் பெறுவதற்காக கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த வணிகப் பெயரின் உரிமையை விட்டுவிட்டனா். இப்போது, வணிகப் பெயா் இல்லாத பொருள்களுக்கும் வரிவிதிக்கப்படும் என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

மாவு அரைக்கும் இயந்திரத்துக்கான (வெட்கிரைண்டா்) வரியை ஐந்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தியுள்ளது, அதன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜிஎஸ்டி சட்ட அமலாக்கம் தொழில் வணிகத் துறைக்கு ஏற்படுத்தியுள்ள வேதனைகளையும், வரி செலுத்துவோா் சந்திக்கின்ற சிரமங்களையும் இந்த முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. வரி வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எனவே, மதுரையில் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இப்பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான குழுவை அமைக்க தகுந்த பரிந்துரைகளை சமா்ப்பிக்க, மத்திய நிதியமைச்சா்உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com