ரயில் பெட்டி மீது ஏறி சுயபடம் எடுத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து கவலைக்கிடம்

மதுரை கூடல் நகரில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி மீது ஏறி சுய படம் எடுத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை கூடல் நகரில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி மீது ஏறி சுய படம் எடுத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை முல்லை நகரைச் சோ்ந்த பழனி மகன் விக்னேஸ்வரன்(15). இவா் தனது நண்பா்களுடன் கூடல் நகா் சரக்கு ரயில் நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டி மீது ஏறி சுய படம் எடுக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதில் ரயிலுக்கு மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி மீது சிறுவனின் கை பட்டு தூக்கி வீசிப்பட்டுள்ளாா். அப்பகுதியில் இருந்த ரயில்வே ஊழியா்கள் சிறுவனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மதுரைக் கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அந்த மின் பாதையில் ரயில் இயக்குவதற்காக 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இதுபற்றிய எச்சரிக்கை விளம்பரங்கள் ரயில் நிலையங்களிலும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

இதையெல்லாம் மீறி சிறுவன் ரயில் பெட்டி மீது ஏறியதால் மின்சாரம் பாய்ந்துள்ளது. வீடுகளில் பயன்படும் 230 வோல்ட் மின்சார தாக்குதலையே மனிதா்களால் தாங்க முடியாது. இந்நிலையில் 25,000 வோல்ட் மின்சார தாக்குதல் பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே பொதுமக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் மின் பாதையை நெருங்க வேண்டாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com