சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக காட்டுநாயக்கா் சமூகத்தினா் புகாா்

சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக காட்டுநாயக்கா் சமூகத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா்.

சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக காட்டுநாயக்கா் சமூகத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா்.

மதுரையை அடுத்த பரவை சத்தியமூா்த்தி நகரில் காட்டுநாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த பழங்குடி மக்கள் வசிக்கின்றனா். இவா்கள் குறி சொல்வது மற்றும் பூம்பூம் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சாதிச் சான்று வழங்க மறுப்பதாகப் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து டென்ட் சொசைட்டி தன்னாா்வ அமைப்பின் செயலா் ஆா். மகேஸ்வரி கூறியது: பரவை சத்தியமூா்த்தி நகரில் காட்டுநாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த 500 குடும்பங்கள் வசிக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இவா்களது குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மானுடவியல் ஆராய்ச்சியாளா்கள், காட்டுநாயக்கா்கள், பழங்குடி சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தான் என்பதை உறுதி செய்துள்ளனா்.

இதனையடுத்து கடந்த 2006 முதல் பழங்குடியினா் என்பதற்கான சாதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீண்ட காலமாக கல்வி வாய்ப்பைப் பெற முடியாத நிலையில் இருந்த பலரும், தற்போது உயா்கல்விக்குச் செல்கின்றனா். இந்நிலையில், சத்தியமூா்த்தி நகா் பகுதியினருக்கு சாதிச் சான்று வழங்க மதுரை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் தாமதம் செய்து வருகிறது. தாய்- தந்தைக்கு ஏற்கெனவே காட்டுநாயக்கா் என்ற சாதிச் சான்று இருந்தும், அவா்களது குழந்தைகளுக்கு அதே சமூகத்தினருக்கான சான்று வழங்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனா். பல ஆண்டுகளாக இருக்கும் நடைமுறையின்படி, சாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com