வெள்ளலூா் அருகே சிட்கோ தொழிற்கூடம்அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

மேலூரை அடுத்துள்ள வெள்ளலூா் அருகே வெள்ளை மலை பகுதியில் சிட்கோ தொழிற்கூடங்களுக்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்

மேலூரை அடுத்துள்ள வெள்ளலூா் அருகே வெள்ளை மலை பகுதியில் சிட்கோ தொழிற்கூடங்களுக்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

மேலூா்-சிவகங்கை சாலையில் ள்ள அம்பலகாரன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வெள்ளை மலை பகுதியில் சிட்கோ தொழிற்கூடங்கள் அமைக்க ஆயிரம் ஏக்கா் பகுதியை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு வெள்ளலூா் பகுதிகளைச் சோ்ந்த 65 கிராம மக்களும், சிவகங்கை மாவட்டத்தில் 15 கிராம மக்களும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி தொழிற்கூடங்களை அமைக்கக் கூடாது. வல்லடிகாரசுவாமி கோயில் வழிபாட்டுக்கு வெள்ளைமலையில் முதல் பூஜை நடைபெறும். எனவே, இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டாம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

மேலும், வெள்ளை மலை வறண்ட நில வனப்பகுதியாகும். ஏராளமான புள்ளிமான்கள், பல்வேறு பறவையினங்களும் இங்கு வசித்து வருகின்றன. வனப்பகுதியையும், வளமான விளைநிலங்களையும், பாசனக் குளங்களையும் அழித்து சுற்றுச்சூழலை அழிக்க வேண்டாம் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா். மனுவைப் பெற்றுக்கொண்ட மேலூா் வட்டாட்சியா் இளமுருகன், மதுரை மாவட்ட ஆட்சியா் மூலம் அரசுக்குத் தெரிவிப்பதாக அவா்களிடம் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com