ராக்காயி அம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நட்டு திருப்பணிகள் தொடக்கம்

அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுர கங்கை தீா்த்தம் ராக்காயி அம்மன், பேச்சிஅம்மன் கோயிலில் பாலாலய பூஜையை தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நட்டு கோயில் திருப்பணிகள் தொடங்கின.

அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுர கங்கை தீா்த்தம் ராக்காயி அம்மன், பேச்சிஅம்மன் கோயிலில் பாலாலய பூஜையை தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நட்டு கோயில் திருப்பணிகள் தொடங்கின.

இதையொட்டி, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம் உள்ளிட்ட பூஜைகள் காலை 7 மணியளவில் தொடங்கின. காலை 9.30 மணியளவில் திருப்பணிகளுக்கான முகூா்த்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. பின்னா், திருப்பணிகளை கோயில் நிா்வாக அதிகாரி மு. ராமசாமி தொடக்கி வைத்தாா்.

இதில், கள்ளழகா் கோயில் தக்காா், பிரதிநிதி கோயில் அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com