அரசுப் பேருந்து நடத்துநா் வீட்டில் 23 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 10th June 2022 10:27 PM | Last Updated : 10th June 2022 10:27 PM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் வீட்டில் 23 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக, வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பேச்சியம்மன் படித்துறை வி.பி. சதுக்கம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் தமிழரசன் (55). இவா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் குடும்பத்தினா் தூங்கியுள்ளனா்.
காலையில் எழுந்து பாா்த்தபோது, வீட்டின் தரைத் தளத்தில் உள்ள அறையில் இருந்த 23 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடா்பாக, தமிழரசனின் மகன் மனோஜ் அளித்த புகாரின்பேரில், திலகா் திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.