ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை பணி நீட்டிப்பு: அரசுக்கு கோரிக்கை
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: தமிழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களுக்கு ஆண்டு இறுதி வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநிலப் பொருளாளா் கே.அனந்தராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெறும்போது, மாணவா்களின் கல்வி நலன் கருதி கல்வி ஆண்டின் இறுதி வரை(ஜூன் முதல் ஏப்ரல் வரை)பணி நீட்டிப்பு வழங்குவது வழக்கம். எனவே தமிழக அரசு அதே நடைமுறையை தற்போதும் தொடர வேண்டும் என்று கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.