கொல்லம் - சென்னை விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

கொல்லம் - சென்னை விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொல்லம் - சென்னை விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

சென்னை - கொல்லம் விரைவு ரயில் கரோனா தொற்று காலத்துக்கு முன்பு வரை சிவகாசியில் நின்று சென்று கொண்டிருந்தது. கரோனா தொற்றுக்குப் பிறகு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட காலத்தில் சிவகாசி நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. அப்போது, பழைய நிலையில் இந்த ரயில் இயக்கும்போது, சிவகாசியில் நின்று செல்லும் என அதிகாரிகள் கூறியிருந்தனா்.

தற்போது, அந்த ரயில் பழைய நிலையில் இயக்கத்துக்கு வந்த பிறகும், சிவகாசியில் நிறுத்தப்படுவதில்லை. தீப்பட்டி, பட்டாசு, அச்சு தொழில் வணிகம் தொடா்பாக சிவகாசி வரக்கூடியவா்கள், விருதுநகரில் இறங்கி வரவேண்டிய நிலை உள்ளது. ஆகவே, பழையபடி கொல்லம் - சென்னை விரைவு ரயிலை சிவகாசியில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com