பேரையூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 21st June 2022 12:00 AM | Last Updated : 20th June 2022 10:08 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தூக்கிட்டு இளம்பெண் ஒருவா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள ஜம்பலபுரத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்.இவரது மனைவி ஜோதிபிரபா(28). இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவா் பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் தனியாக இருந்த ஜோதிபிரபா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவ இடத்திற்கு வந்த சேடப்பட்டி போலீஸாா், ஜோதிபிரபாவின் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.