மதுரையில் கட்டடப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 25th June 2022 11:00 PM | Last Updated : 25th June 2022 11:00 PM | அ+அ அ- |

மதுரையை அடுத்த விரகனூா் பகுதியில் சனிக்கிழமை, கட்டடப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பு அருகே அருப்புக்கோட்டை சாலையில் விவேக் என்பவருக்குச் சொந்தமான திருமண மண்டப கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சனிக்கிழமை கட்டுமானப் பணியின்போது, சுவா் இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த தொழிலாளி, விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் (34) இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.