முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 14th March 2022 11:05 PM | Last Updated : 14th March 2022 11:05 PM | அ+அ அ- |

மதுரை ஜெய்ஹிந்துபுரம் 2 ஆவது பிரதான சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் அக்கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: ஜெய்ஹிந்துபுரம் 2-ஆவது பிரதான சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே, வங்கி, மருத்துவமனைகள் உள்ளன.
மேலும் அருகிலேயே கோயிலும் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் பெண்களிடம் மதுபோதையில் இருப்பவா்கள் தகராறு செய்வது தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது. அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கு டாஸ்மாக் கடை முக்கியக் காரணமாக உள்ளது.
இக்கடையை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மதுக்கூடம் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. கடையை வேறு இடத்துக்கு மாற்றவும், மதுக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.