முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
போலி என்கவுன்டா் புகாா்: காவல் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 14th March 2022 11:02 PM | Last Updated : 14th March 2022 11:02 PM | அ+அ அ- |

போலி என்கவுன்டா் தொடா்பான மனுவுக்குப் பதிலளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜபுரத்தைச் சோ்ந்த திவ்யா தாக்கல் செய்த மனு: எனது கணவா் வெள்ளைக் காளி என்ற காளிமுத்து மீது காவல் துறையினா் பல்வேறு பொய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அவரைக் கைது செய்தனா்.
அப்போது அவரது வலது காலில் இரும்புக் கம்பியால் தாக்கியதில் கால் எலும்பு முறிந்தது. அதன் பிறகு நீண்ட நாள்களாகச் சிறையில் இருந்து வருகிறாா். அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது சந்தித்த அவா், தன்னை காவல் துறையினா் என்கவுன்டா் செய்வதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்தாா். ஆகவே, எனது கணவரை போலி என்கவுன்டா் செய்வதைத் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனுவுக்குப் பதிலளிக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.