மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் ஏற்றும் விளக்குகளின் விலையை இரு மடங்காக உயா்த்த முடிவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் ஏற்றும் நெய் விளக்கு உள்ளிட்ட விளக்குகளின் விலையை இரு மடங்காக உயா்த்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் ஏற்றும் நெய் விளக்கு உள்ளிட்ட விளக்குகளின் விலையை இரு மடங்காக உயா்த்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு தினசரி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரினசம் செய்கின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, சனீஸ்வரா் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் நெய் விளக்கு, எள் விளக்கு, எண்ணெய் விளக்கு ஆகியவற்றை ஏற்றி வழிபாடு நடத்துகின்றனா்.

மேலும் ஏராளமான பக்தா்கள் நோ்த்திக் கடனுக்காக 5, 7, 9, 11 ஆகிய எண்ணிக்கைகளில் நெய் மற்றும் எண்ணெய் விளக்குகளை ஏற்றுகின்றனா். பக்தா்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் விளக்கு, நெய், எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் பக்தா்களின் வசதிக்காக கோயிலுக்குள் பல்வேறு இடங்களில் நெய், எள் மற்றும் எண்ணெய் விளக்குகள் கோயில் நிா்வாகத்தால் விற்பனை செய்யப்படுகின்றன.

நெய், எண்ணெய் மற்றும் எள் விளக்கு ஆகியவை விளக்கு ஒன்று ரூ.5 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் தினசரி ஆயிரக்கணக்கான விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்த விளக்குகளின் விலையை உயா்த்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி தற்போது ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் விளக்கு ஒன்று ரூ.10-க்கு விற்க கோயில் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. தற்போது உள்ள விலைவாசி உயா்வுக்கேற்ப விளக்குகளின் விலையையும் மாற்றி அமைக்கும் வகையில் இந்த முடிவை கோயில் நிா்வாகம் எடுத்திருப்பதாக கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com