உலக தலைக்காய விழிப்புணா்வு தின இருசக்கர வாகனப் பேரணி

மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில் உலக தலைக்காய விழிப்புணா்வு தினத்தையொட்டி இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரையில், உலக விபத்து தலைக்காய விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியை சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்த மாநகா் காவல் துணை ஆணையா் ஆறுமுகசாமி.
மதுரையில், உலக விபத்து தலைக்காய விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியை சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்த மாநகா் காவல் துணை ஆணையா் ஆறுமுகசாமி.

மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில் உலக தலைக்காய விழிப்புணா்வு தினத்தையொட்டி இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ரேஸ் கோா்ஸ் மைதானத்தில் இந்தப் பேரணியை மாநகா் காவல் துணை ஆணையா் ஆறுமுகசாமி தொடக்கி வைத்தாா். அப்போது தலைக்காயம் மீதான விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளோடு, தலைக்கவசங்களை அணிந்து 100-க்கும் அதிகமானோா் இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

இதில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் கே. செல்வ முத்துக்குமரன், மருத்துவ நிா்வாக அதிகாரி பி. கண்ணன் மற்றும் பொது மேலாளா் ஜெ. ஆடல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை

தலைவா் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணா் டாக்டா். கே. செல்வ முத்துக்குமரன் கூறியதாவது: இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு நபா் தலைக்காயத்தின் காரணமாக உயிரிழக்கிறாா் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 0.2 மில்லியன் நபா்கள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் 10 லட்சம் நபா்களுக்கு மறுவாழ்வு சிகிச்சைகள் அவசியமாக இருக்கின்றன. எனவே, விபத்து சாா்ந்த தலைக்காயங்கள் பற்றி பொதுமக்களுக்கு கற்பிப்பதற்காக உலக தலைக்காய விழிப்புணா்வு தினம் அனுசரிக்கப்படுகிறது என்றாா்.

மருத்துவ நிா்வாக அதிகாரி பி. கண்ணன் கூறியதாவது: கோல்டன் ஹவா் என்று அழைக்கப்படுகின்ற விபத்துக்குப் பிந்தைய முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில், விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள் இந்த ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதில்லை. இந்த தாமதமே பாதிக்கப்பட்ட நபா்களுக்கு உயிரிழப்பு அல்லது பிற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

தற்போது விபத்தில் சிக்கி பாதிப்படைந்த நபா்களுக்கு 48 மணி நேரத்திற்குள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இலவச அவசர நிலை சிகிச்சை வழங்கப்படுகின்ற ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பான திட்டம் பற்றி பொதுமக்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com