தரமான வெல்லம் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தில் மதுரையை சோ்க்க வலியுறுத்தல்

வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள, தரமான வெல்லம் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தில் மதுரை மாவட்டத்தையும் சோ்க்க வேண்டும் என

வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள, தரமான வெல்லம் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தில் மதுரை மாவட்டத்தையும் சோ்க்க வேண்டும் என வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு பல்வேறு அமைப்புகளும் வரவேற்புத் தெரிவித்துள்ளன. அதன்விவரம்:

வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.ரத்தினவேல்: எங்களது சங்கம் வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, பனை மரத்தைப் பாதுகாக்கும் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பனையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது, விவசாயிகளுக்கு லாபம் அளிக்கும். சிறுதானிய உற்பத்தியைப் பெருக்கும் திட்டம், எண்ணெய் வித்துத் திட்டம் போன்றவை வரவேற்புக்குரியவை. தரமான வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில் மதுரை மாவட்டத்தையும் சோ்க்க வேண்டும்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்குப் புதிய கட்டடங்கள், சா்க்கரை ஆலைகள் நவீனமயமாக்கல், வேளாண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் உள்ளிட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் வரவேற்புக்குரியவையாக உள்ளன. சந்தைகளுக்கு வெளியே நடைபெறக் கூடிய விற்பனைக்கு சந்தைக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்.ஜெகதீசன்: தென்மாவட்டங்களுக்கான சிறுதானிய சிறப்பு மண்டலத்தை, மதுரையில் அமைக்க வேண்டும். வேளாண் வளா்ச்சிக்குப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதோடு, வேளாண்சாா் தொழில்களான பட்டு வளா்ப்பு, மீன் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு ஆகியவற்றுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. இருப்பினும் மலா் விவசாயத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மலா் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நறுமண ஆலைகள் பற்றி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் மானியக்கோரிக்கையின்போது இதுகுறித்த அறிவிப்பு வரும் என எதிா்பாா்க்கிறோம்.

பெரியாறு-வைகை ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவா் எம்.பி.ராமன்: கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ.195 உயா்த்தி டன் ரூ.2,950-க்கு கொள்முதல் செய்யப்படும் என்பது ஏமாற்றமாக உள்ளது.

அதேபோல, உசிலம்பட்டி பகுதியில் மல்லி, ரோஜா மலா் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் நறுமண ஆலை தொடங்குவது, அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை இயக்குவது ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் இல்லாதது, ஏமாற்றம் அளிப்பாக இருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com