மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு ஏப்ரல் 1 முதல் சிறப்பு விரைவு ரயில்: தெற்கு ரயில்வே

மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: பயணிகளின் வசதிக்காக மதுரை- செங்கோட்டை பிரிவில் கூடுதலாக ரயில் சேவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, செங்கோட்டை- மதுரை விரைவு சிறப்பு ரயில் (06662), செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு மதுரையை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் மதுரை- செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் (06665) மதுரையிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும்.

இந்த ரயில்கள் தென்காசி, கடையநல்லூா், பாம்பகோயில் சந்தை, சங்கரன்கோயில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகா், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 13, காப்பாளா் மற்றும் சரக்கு பெட்டிகள் 2 ஆகியவை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com