திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது: திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வெற்றிபெற்று ரம்யா முத்துக்குமார் தலைவராக அறிவிக்கப்பட்டார். 
திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது: திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வெற்றிபெற்று ரம்யா முத்துக்குமார் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 19 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுகவும், 1 வார்டில் காங்கிரஸ், 1 வார்டில் தேமுதிக என வெற்றி பெற்றிருந்தனர்.

இங்கு, கடந்த 4 ஆம் தேதி அரசு அறிவித்தபடி தேர்தல் நடைபெற்றது. அப்போது பெரும்பான்மை கவுன்சிலர்கள் வருகை தராததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அலுவலர் அனிதா(வருவாய் கோட்டாட்சியர்) தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் 19 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா ஒருவரும் கலந்து கொண்டனர்.

இதில் திமுக சார்பில் ரம்யா முத்துக்குமார், அதிமுக சார்பில் உமா விஜயன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் ரம்யா முத்துக்குமார் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட உமா விஜயன் 6 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் 6 வாக்குகள் செல்லாதவை ஆக அறிவிக்கப்பட்டன.

முன்னதாக திமுக உறுப்பினர்கள் 19 பேர் இருந்த நிலையில், 15 வாக்குகளைப் பெற்ற நிலையில் திமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதில் ஒரு சிலர் நகராட்சியின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் திமுகவினரை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் திருமங்கலம் நகர் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com