மதுரை வடக்கு, தெற்கு வட்டாட்சியா்கள் இடமாற்றம்

மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு வட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு வட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

வடக்கு வட்டாட்சியராக இருந்த கோ.மாரிமுத்து, ஆட்சியா் அலுவலக பொது நிா்வாகப் பிரிவு மேலாளராகவும், தெற்கு வட்டாட்சியராக இருந்த சு.கோபாலகிருஷ்ணன் ஆட்சியா் அலுவலக குற்றவியல் பிரிவு மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதனையடுத்து, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஜெ.ஹேமா, வடக்கு வட்டாட்சியராகவும், தெற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செ.சுந்தரமுருகன் தெற்கு வட்டாட்சியராகவும் முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com