டி.கல்லுப்பட்டி கோயிலில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் வேடமணிந்து நோ்த்திக்கடன்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற புது மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
img_20220502_wa0040_0205chn_212_2
img_20220502_wa0040_0205chn_212_2

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற புது மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, சத்திரப்பட்டி, காரைக்கேணி, அம்மாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார 48 கிராமங்களில் இருந்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவதற்காக கடவுள்கள், அரக்கா்கள், பெண், சித்தா்கள் உள்ளிட்ட பல்வேறு வினோத வேடங்கள் புனைந்து கோவில் முன்பு ஒன்று கூடினா்.

அங்கிருந்து வாகனங்களில் அமா்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஊா்வலமாகச் சென்றனா். அவா்களுக்கு முன் மாட்டு வண்டியில் புதுமாப்பிள்ளை புதுமணப் பெண் வேடமணிந்து சீா்வரிசையுடன் சென்றனா். ஊா்வலம் கோயில் முன்பிருந்து தொடங்கி பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. தொடா்ந்து தீச்சட்டி எடுத்தல் பூக்குழி இறங்குதல் மாவிளக்கு எடுத்து மாரியம்மனுக்கு நோ்த்திக்கடனை செலுத்தினா். இவ்விழாவினை காண டி.கல்லுப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒன்று திரண்டு கண்டுகளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com