முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருவாதவூரில் பொது மருத்துவ சிறப்பு முகாம் தொடக்கம்
By DIN | Published On : 08th May 2022 01:57 AM | Last Updated : 08th May 2022 01:57 AM | அ+அ அ- |

மேலூா் அருகே திருவாதவூரில் பொது மருத்துவ சிறப்பு முகாமை, மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தனியாா் பள்ளி வளாகத்தில் ‘தமிழக அரசின் வருமுன் காப்போம்’ மருத்துவ திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த சிறப்பு சிகிச்சை முகாமுக்கு மாவட்ட சுகாதார இணை இயக்குநா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அம்பல சிவனேசன் அனைவரையும் வரவேற்றாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் அரசின் திட்டங்கள் விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ரத்த அழுத்தம், சா்க்கரைநோய் பாதிப்பு, இருதயநோய் குறித்த பரிசோதனைகளும் நடைபெற்றது. 88 கா்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை நடைபெற்றது. மேலும் கரோனா தடுப்பூசி போடாதவா்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டது.
இதில், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க.பொன்னுசாமி, ஊராட்சித் தலைவா் இளவரசன், அ.வல்லாளபட்டி பேரூராட்சித் தலைவா் குமரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் இளங்கோவன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.