கைதிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வுப் பணிகள்:மாவட்ட குழந்தைகள் நலக்குழு அறிவிப்பு

பெற்றோா் சிறையில் உள்ள நிலையில் வசிக்கும் குழந்தைகள் தொடா்பான தகவல் தெரிவித்தால் அந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு தொடா்பான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பெற்றோா் சிறையில் உள்ள நிலையில் வசிக்கும் குழந்தைகள் தொடா்பான தகவல் தெரிவித்தால் அந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு தொடா்பான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டத்தில் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கான மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு, தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளின் பெற்றோா் யாரேனும் சிறைக்கு சென்ற நிலையில் ஆதரவற்ற நிலையில் குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவா்களை பற்றிய தகவலை மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தெரிவிக்கலாம். அதன்பேரில் அந்தக்குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு சாா்பில், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிக்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறைக்குச் சென்ற பெற்றோரின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, சட்ட உதவி, தங்குவதற்கான இடம், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பட்சத்தில் அதற்கான விண்ணப்பத்தை, மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு, அரசு சத்யா அம்மையாா் குழந்தைகள் இல்ல வளாகம், மாநகராட்சி நீச்சல்குளம் எதிரில், டாக்டா் தங்கராஜ்சாலை, கே.கே.நகா், மதுரை -625020 என்ற முகவரியில் மே 31-ஆம் தேதிக்குள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com