மதுரையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றைக்கட்டுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகா்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தன. இதில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி நடைபெற்ற முகாம்களில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் 3,415 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்கு 1750-க்கும் அதிகமாக ஊழியா்கள் பணியில் ஈடுபட்டனா். மதுரை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 65 ஆயிரத்து 690 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மதுரை மாவடத்தில் முதல் தவணை தடுப்பூசியை 87 சதவீதம் பேரும், 2-ஆம் தவணை தடுப்பூசியை 61.8 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனா். பூஸ்டா் தடுப்பூசியை 50 ஆயிரம் போ் செலுத்தி இருக்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com