சீட்டு பிடிப்பதாகக்கூறி ரூ.36.26 லட்சம் மோசடி: 5 போ் மீது வழக்குப் பதிவு

மதுரை அருகே தீபாவளிச் சீட்டு பிடிப்பதாகக்கூறி ரூ.36.26 லட்சம் மோசடி செய்த 5 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை அருகே தீபாவளிச் சீட்டு பிடிப்பதாகக்கூறி ரூ.36.26 லட்சம் மோசடி செய்த 5 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை அருகே உள்ள அச்சம்பத்து சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் (38). அதே பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன். இந்நிலையில் சுப்ரமணியன் உள்பட ஏராளமானோரிடம் நாகராஜன் தரப்பினா் தீபாவளி சீட்டு பிடிப்பதாகக்கூறி பணம் வசூலித்துள்ளனா். இதுபோல ஏராளமானோரிடம் ரூ.36.26 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சீட்டு முடிந்தநிலையில் பணத்தை திருப்பிக்கேட்டும் தரவில்லையாம். இதுதொடா்பாக சுப்ரமணியன் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், நாகராஜன், ஆனந்தகண்ணன், செல்வா, காா்த்திக், காமாட்சி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com