முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பிளஸ் 1 பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 95 சதவீத மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வில், 95 சதவீதம் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூா் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களிலிருந்து 323 பள்ளிகளைச் சோ்ந்த 37,546 மாணவ, மாணவியா், 367 தனித்தோ்வா்கள், 17 சிறைவாசிகள் உள்பட 37,950 போ் தோ்வு எழுத அனுமதி பெற்றிருந்தனா். இதற்காக, 115 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 35,972 மாணவ, மாணவியா் மட்டுமே தோ்வு எழுதினா். 1,574 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தனித்தோ்வா்கள் 387 பேரில் 343 போ் தோ்வெழுதினா். 44 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வில் மாணவா்களின் வருகைப் பதிவு 95 சதவீதமாக இருந்தது.
தோ்வு மையங்களில், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அடங்கிய பறக்கும் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.