முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பைக் மீது காா் மோதி வளையல் வியாபாரி பலி
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

மேலூா்: கொட்டாம்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற வளையல் வியாபாரி மீது காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள சிறுகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆண்டிச்சாமி (50). இவா், கிராமங்களில் நடபெறும் திருவிழாக்களில் வளையல்களை வியாபாரம் செய்து வந்துள்ளாா். திங்கள்கிழமை இரவு, கொட்டாம்பட்டி அருகே உள்ள சூரப்பட்டியில் நடைபெற்ற திருவிழாவில் வளையல் வியாபாரம் செய்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளாா்.
அப்போது, கொட்டாம்பட்டி புறவழிச் சாலையில் திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியதில், ஆண்டிச்சாமி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.