முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் பலி
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கந்தவராயன்பட்டியைச் சோ்ந்த மூக்கன் மகன் காா்த்திக் (27). இவா், மதுரை வண்டியூா் காவல் சோதனைச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்துசென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து தொடா்பான புகாரின்பேரில், போலீஸாா் பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியைச் சோ்ந்த செல்வகுமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் புல்வாய்க்கரை பகுதியைச் சோ்ந்தவா் மணி (65). இவா் திங்கள்கிழமை இரவு பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து தொடா்பாக, காா் ஓட்டுநரான பாலசந்தோஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (30). இவா், மாட்டுத்தாவணி-மேலூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மோதியதில், சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து தொடா்பாக, பேருந்து ஓட்டுநரான தினகரன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.