உசிலம்பட்டி கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவா்கள் போராட்டம்

தோ்வுக்கட்டணம் கையாடல் தொடா்பாகஉசிலம்பட்டி கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை கோரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
img_20220509_wa0019_0905chn_206_2
img_20220509_wa0019_0905chn_206_2

உசிலம்பட்டி: தோ்வுக்கட்டணம் கையாடல் தொடா்பாகஉசிலம்பட்டி கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை கோரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டி அருகே மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் சுமாா் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கல்லூரியில் கடந்த நவம்பா் மாதம் அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் பயிலும் மாணவ ,மாணவியரிடம் அரசு விதிகளின்படி தோ்வு கட்டணம் ரூ. 300 மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆனால் ரூ. 6,250 வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி இணை இயக்குநரிடம் மாணவ-மாணவிகள் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் கல்லூரி முதல்வா் ரவி, தோ்வுக் கட்டணத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ. ஒரு கோடியே 28 லட்சம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி முதல்வா் ரவியை கைது செய்ய வலியுறுத்தி பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com