பேரையூா் பத்திரப்பதிவு அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள் பேரையூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
img20220509132543_0905chn_212_2
img20220509132543_0905chn_212_2

பேரையூா்: முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள் பேரையூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலம்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (52). மாற்றுத்திறனாளியான இவா் மாற்றுத்திறனாளிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளராக உள்ளாா் . இவருக்குச் சொந்தமான 2 ஏக்கா் விவசாய நிலம் சோலைபட்டி அருகே உள்ளது . அந்த நிலத்தில் முருகன் குடும்பத்தினா் விவசாயம் செய்து வருகின்றனா். இந்நிலையில் பக்கத்து நிலத்தை பாப்பாமுருகன் என்பவா் வாங்கியுள்ளாா். வெள்ளிக்கிழமை பாப்பா முருகன் நிலத்தை வேறொரு நபருக்கு பத்திரப்பதிவு செய்ய முயன்றுள்ளாா். அந்த இடத்தை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என பேரையூா் சாா்-பதிவாளரிடம் முருகன் புகாா் மனு கொடுத்தாா். அதில் தனது இடமும் பட்டாவில் வருவதால் முறையாக சா்வே செய்த பின்பு பத்திரம் பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளாா்.

ஆனால் அந்த இடத்தை வெள்ளிக்கிழமை மற்றொரு நபருக்கு சாா்-பதிவாளா் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை பத்திரப் பதிவை ரத்து செய்யக்கோரி முருகன் குடும்பத்தினா் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கத்தை சாா்ந்தவா்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்பு முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரபதிவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனா் . அதைத்தொடா்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா்பதிவாளா் பொறுப்பில் இருந்த சுப்பையா முருகனை அழைத்துப் பேசினாா். மேலும் முருகனிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட சாா்-பதிவாளா் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினாா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com