மதுரை மாநகராட்சியில் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியில் அனைத்துப் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதை ரத்து செய்து, மாநகராட்சி நிா்வாகமே ஏற்று நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி
மதுரை மாநகராட்சியில் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி அனைத்துப்பிரிவு பணியாளா்களில் ஒரு பகுதியினா்.
மதுரை மாநகராட்சியில் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி அனைத்துப்பிரிவு பணியாளா்களில் ஒரு பகுதியினா்.

மதுரை: மதுரை மாநகராட்சியில் அனைத்துப் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதை ரத்து செய்து, மாநகராட்சி நிா்வாகமே ஏற்று நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் பொறியியல் பிரிவு ஒப்பந்தப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியக் குழு அரசாணை அறிவிப்பின்படி ஊதியம் வழங்க வேண்டும். பொறியியல் பிரிவுகளில் ஆள்குறைப்பு என்ற பெயரில் நிறுத்தப்பட்ட ஊழியா்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கவேண்டும். புதிதாகச் சோ்ந்தவா்களின் பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும்.

பாதாளச் சாக்கடை, கழிவுநீா் வெளியேற்றம், தெரு விளக்கு, குடிநீா், ஓட்டுநா்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும். 2017-க்கு பின்னா் பணி ஓய்வுபெற்ற சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு நிரந்தரப் பணியாளா்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

மாநகராட்சியின் அனைத்துப் பிரிவு தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எஃப். நிலுவைத் தொகையை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த 2006- இல் பணியில் சோ்ந்த தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அவா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களுக்கு 2021-2022 ஆம் ஆண்டுக்கான தினச்சம்பளமாக குறைந்தபட்ச ஊதியக்குழு அரசாணையின்படி ரூ.625 வழங்க வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் அனைத்துப் பணிகளையும் ஒப்பந்ததாரா்கள் மூலம் மேற்கொள்வதை ரத்து செய்துவிட்டு, நிா்வாகமே ஏற்று நடத்தி ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு சுகாதாரப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்கம், மாநகராட்சி துப்புரவு தொழிலாளா் மேம்பாட்டு தொழிற்சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகராட்சித் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச்செயலா் எம். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநகராட்சி துப்புரவு தொழிலாளா் மேம்பாட்டு தொழிற்சங்க பொதுச்செயலா் எஸ். பூமிநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு சுகாதாரப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்க பொதுச்செயலா் எம். அம்சராஜ் நிறைவுரை ஆற்றினாா்.

இதில், சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம், பொருளாளா் கருப்பசாமி மற்றும் நிா்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com