இளையான்குடிபுதிய பேருந்து நிலைய பணிக்கு தடை கோரி மனு: நகராட்சி நிா்வாகத் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்குத் தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீா் வழங்கல் துறைச் செயலருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்குத் தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீா் வழங்கல் துறைச் செயலருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த முகமது நாசா் தாக்கல் செய்த மனு:

இளையான்குடி பேருந்து நிலையம் பேரூராட்சியின் மையப் பகுதியில் செயல்பட்டு வருவதால், சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் அச்சமின்றி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். இங்கிருந்து 4 கிமீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இப் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் மயானம் ஆகியன உள்ளன. இப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நகரங்களுக்கான பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா்.

ஆகவே, பழைய பேருந்து நிலையத்தின் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, இப் பகுதியிலேயே விரிவாக்கம் செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. இந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. ஆகவே, இளையான்குடியில் புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்திற்கு தடை விதிக்கவும், பழைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு, தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைச் செயலா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com