தமுக்கம் மைதானத்தில் மே 14 இல்அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

தமுக்கம் மைதானத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மே 14 ஆம் தேதி அரசுப் பொருள்காட்சி தொடங்குகிறது.

மதுரை: தமுக்கம் மைதானத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மே 14 ஆம் தேதி அரசுப் பொருள்காட்சி தொடங்குகிறது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சித்திரைத் திருவிழாவின்போது நடத்தப்படும் அரசுப் பொருள்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக

நடைபெறவில்லை. நிகழ் ஆண்டில் சித்திரைத் திருவிழாவின்போது, தமுக்கம் மைதானத்திற்குப் பதிலாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் பொருள்காட்சி நடத்த மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிா்ப்பு கிளம்பியது. இதனால், சித்திரைத் திருவிழாவின்போது பொருள்காட்சி தொடங்குவதில் தாமதம் ஆனது. தற்போது, தமுக்கம் மைதானத்திலேயே பொருள்காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருள்காட்சி தொடக்க விழா மே 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். தமிழக அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

அரசு நலத்திட்டங்களை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பொதுமக்கள்பயன்பெறுவதற்கான பல்வேறு சிறப்பு முகாம் அரங்குகளும் இடம்பெறுகின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் பொருள்காட்சியில் இடம்பெறும். தினமும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 14 முதல் 45 நாள்களுக்கு பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை பொருள்காட்சி நடைபெறும். பொருள்காட்சிக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com