Enable Javscript for better performance
ஜாமீன் கோரியவா்களுக்கு உயா்நீதிமன்றம் நிபந்தனை: அரசுப் பள்ளிகளுக்கு நிதி வழங்க உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

    ஜாமீன் கோரியவா்களுக்கு உயா்நீதிமன்றம் நிபந்தனை: அரசுப் பள்ளிகளுக்கு நிதி வழங்க உத்தரவு

    By DIN  |   Published On : 13th May 2022 05:30 AM  |   Last Updated : 13th May 2022 05:30 AM  |  அ+அ அ-  |  

     

    மதுரை: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாகக் கைதான மூவருக்கு, அரசுப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்காக நிதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்த முரளி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சோ்ந்த அந்தோணி ராஜ், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மகேஸ்வரி ஆகியோா், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக வெவ்வேறு பகுதிகளில் கைதாகியுள்ளனா்.

    இவா்கள் மூவரும் தனித்தனியே ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளைச் செய்வதற்காக நிதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூவருக்கும் ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

    அதன்படி, மேலூா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட முரளி, மதுரை யா.ஒத்தக்கடை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தானியங்கி சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் அமைப்பதற்கு ரூ.25 ஆயிரமும், கோவில்பட்டி கிழக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்தோணிராஜ், அங்குள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.50 ஆயிரமும், தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட மகேஸ்வரி, சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.1.50 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த தொகையை வரைவோலையாக சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp