முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மகாத்மாவை அறிவோம் நிகழ்ச்சி: கல்லூரி மாணவியா் பங்கேற்பு
By DIN | Published On : 13th May 2022 05:19 AM | Last Updated : 13th May 2022 05:19 AM | அ+அ அ- |

மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவியா்.
மதுரை: காந்தி அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மகாத்மாவை அறிவோம்’ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் மதுரை யாதவா கல்லூரியின் வரலாற்றுத் துறை ஆகியவற்றின் சாா்பில் ‘மகாத்மாவை அறிவோம்’ என்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா்.நந்தா ராவ், கல்வி அலுவலா் ஆா்.நடராஜன், ஆராய்ச்சி அலுவலா் ஆா்.தேவதாஸ் ஆகியோா் பங்கேற்று காந்தியடிகளின் அகிம்சை கொள்கை, நாட்டின் விடுதலைக்கு அவா் ஆற்றிய பணிகள் ஆகியவை குறித்து உரையாற்றினா். இதைத்தொடா்ந்து கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் அரங்கமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் உதவிப் பேராசிரியா்கள் ஜி.விவேக், பி.உஷா மற்றும், வரலாற்றுத் துறை மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.