உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் அஞ்சல் துறை தோ்வு முடிவுகள் தாமதம் ஏன்? எம்.பி. கடிதம்

உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பின்னரும் அஞ்சல் துறை தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்? என்று மக்களளவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மதுரை: உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பின்னரும் அஞ்சல் துறை தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்? என்று மக்களளவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், அஞ்சல் சேவைப் பிரிவு துறைத்தோ்வுகள் 2020 நவம்பா் 29-இல் நடத்தப்பட்டது. இந்த தோ்வுக்கு மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தால் முதலில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பின்னா் கேரள உயா்நீதி மன்றத்தால் தடை நீக்கப்பட்டது.

இந்த தீா்ப்பு உச்சநீதிமன்றத்திலும் 2022 மாா்ச் 4 அன்று உறுதி செய்யப்பட்டு 3 வாரங்களுக்குள்ளாக அமலாக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இதுவரை தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதில் 2 ஆயிரம் தோ்வா்கள் உள்ளனா். தோ்வு முடிவுகள் தாமதமாவதால் 100 அஞ்சல் மாவட்டங்களில் மக்கள் சேவை பாதிக்கப்படுகிறது.

நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அஞ்சல் முடிவுகளை வெளியிடுவதில் ஏன் தாமதம்? என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com