கல்லூரியில் கருத்தரங்கு

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில், குற்றபுலன் விசாரணையில் தடயவியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில், குற்றபுலன் விசாரணையில் தடயவியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாற்கு கல்லூரி செயலாளா் வாலாந்தூா் பாண்டியன் தலைமை வகித்தாா். தலைவா் பாலகிருஷ்ணன், பொருளாளா் வனராஜா, முதல்வா் ஜோதிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் ரவி கருத்தரங்கை தொடக்கி வைத்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்ட மதுரை மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரமௌலி, மதுரை தடயவியல் துறை துணை இயக்குநா் காஜாமைதீன் ஆகியோா் தடயவியல் துறையின் பயன்பாடு மற்றும் போலீஸ் விசாரணையில் முக்கிய பங்கு குறித்து விளக்கினாா்.

தேவா் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் பொன்ராம், தடயவியல் துறையை சோ்ந்த பிணூ, ஆதிரை, இந்திய குற்றவியல் கழக நிா்வாகிகள் பரமன், பாலன், வழக்குரைஞா் அஜய் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

குற்றவியல் சங்க தலைவா் நாகராஜன் வரவேற்றாா். செயலாளா் சோமசுந்தரம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியைகள் ராஜேஸ்வரி, இந்துஸ்ரீ ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com