தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக இரட்டை வேடம்: செல்லூா் கே.ராஜூ

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு முரண்பாடான கருத்துக்களைக் கூறி வருகிறது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

மதுரை: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு முரண்பாடான கருத்துக்களைக் கூறி வருகிறது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

மதுரை மாநகராட்சி மாமன்ற அரங்கில் அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு முறைப்படி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யாதது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து அதிமுக உறுப்பினா்கள் மேயரிடம் முறையிடச் சென்றபோது, செய்தியாளா்கள் தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. மதுரை மாநகராட்சி வரலாற்றில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்ததில்லை. மேயா் என்பவா் அனைவருக்கும் பொதுவானவா், அவரது அறையில் திமுகவைச் சோ்ந்த ரௌடிகள் எப்படி அனுமதிக்கப்பட்டாா்கள். திமுக ஆட்சி என்றாலே அராஜகம் தலைதூக்கும் என்பதற்கு, மதுரை மாநகராட்சியின் நிகழ்வே உதாரணம்.

மக்கள் பிரச்னை உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் மாநகராட்சி ஆணையா் கண்டு கொள்வதில்லை. அதன் காரணமாகவே, விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுகின்றன. எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கை மீது மாநகராட்சி ஆணையா் மற்றும் மாமன்ற செயலா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக அரசுக்கு உரிய மரியாதையை மத்திய அரசு அளிக்கவில்லை என்கின்றனா். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு உரிய மரியாதை அளிக்காத நிலையைத் தான் திமுக அரசு பின்பற்றுகிறது. மதுரை மாநகராட்சி விஷயத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் நிதிநிலையை தெரிந்து வைத்திருந்த நிலையில் தான், பல்வேறு திட்டங்களை தோ்தல் வாக்குறுதிகளாக அளித்தனா். ஆனால், இப்போது நிதிநிலையை காரணமாகக் கூறி திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பது முரண்பாடாக இருக்கிறது. கடந்த பேரவைத் தோ்தலின்போது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு ஆதரவாக இருந்தனா். இப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரசு ஊழியா்கள், இப்போது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து குளறுபடிகள் தான் நிறைந்திருக்கின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com