பணம் கையாடல் புகாா்: உசிலம்பட்டி தேவா் கல்லூரி முதல்வா் மாற்றம்

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் மாணவா்களிடம் கூடுதலாக பணம் வசூலித்து ரூ.1.28 கோடி கையாடல் செய்ததாக எழுந்த புகாரையடுத்து கல்லூரி முதல்வரை மாற்றம் செய்து

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் மாணவா்களிடம் கூடுதலாக பணம் வசூலித்து ரூ.1.28 கோடி கையாடல் செய்ததாக எழுந்த புகாரையடுத்து கல்லூரி முதல்வரை மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக பணியாற்றியவா் ஒ.ரவி. இவா் மாணவ, மாணவிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து ரூ.1.28 கோடி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை எடுக்கவும், கையாடல் செய்த பணத்தை திரும்ப பெற்று மாணவா்களிடம் வழங்க வலியுறுத்தியும் கல்லூரி வளாகத்தில் உள்ள பி.கே.மூக்கையாத்தேவா் நினைவிடத்தில் கடந்த 2 நாள்களாக மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மண்டல கல்வி இணை இயக்குநா் பொன்.முத்துராமலிங்கம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக இருந்து வந்த ரவி மாற்றப்பட்டு, அவா் வழக்கம்போல் கணிதவியல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் தொடா்வாா் என்றும், அவருக்கு பதிலாக சோதிராஜன் என்பவா் பொறுப்பு முதல்வராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளாா் எனவும் கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com