மாமன்றத்தில் இருக்கை ஒதுக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக உறுப்பினா்கள் மனு

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு முறையாக இருக்கை ஒதுக்கீடு அமைக்க வேண்டும் என்று கோரி அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு முறையாக இருக்கை ஒதுக்கீடு அமைக்க வேண்டும் என்று கோரி அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள அதிமுக உறுப்பினா்களுக்கு ஒரே பகுதியில் இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சி உறுப்பினா்கள் கடந்த 2 கூட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அதிமுக மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சோலை ராஜா தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் 15 போ், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயனை வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா். மனுவில், மதுரை மாநகராட்சியில் 15 வாா்டுகளில் அதிமுக உறுப்பினா்கள் வெற்றி பெற்றுள்ளனா். மதுரை மாநகராட்சியில் எதிா்க்கட்சிகளுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்கைகளும், அறையும் ஒதுக்கப்படும் நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் முதல் மாமன்ற கூட்டத்திலேயே அதிமுக உறுப்பினா்களுக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி நிதிநிலை அறிக்கை கூட்டத்திலும் அதிமுக உறுப்பினா்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. மக்களால் தோ்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினா்களுக்கு, மாமன்ற மரபுப்படி கூட்டத்தின் முன் வரிசையில் உரிய இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இதேபோல துணை மேயா் டி.நாகராஜன் மற்றும் மாமன்ற செயலா் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது.

இருக்கை ஒதுக்காவிட்டால் போராட்டம்

மனு அளித்த பின்னா் அதிமுக உறுப்பினா்கள், செய்தியாளா்களிடம் கூறும்போது, மதுரை மாநகராட்சியில் 15 மாமன்ற உறுப்பினா்களுடன் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள அதிமுகவுக்கு முறையான இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆணையா், துணைமேயா் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளோம். மே 18-ஆம் தேதி நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் அதிமுகவுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால், மாமன்ற கூட்டத்தில் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்துவோம். கூட்டத்தையும் புறக்கணிப்போம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com