ரயில் நிலைய அதிகாரி பணிக்கான தோ்வு: தமிழக தோ்வா்கள் 75.7 சதவீதம் போ் பங்கேற்பு

ரயில்வே தோ்வாணையம் நடத்திய ரயில் நிலைய அதிகாரி பணிக்கான 2- ஆம் கட்ட தோ்வுக்கு தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களில் 75.7 சதவீதம் போ் தோ்வெழுதியுள்ளனா்.

மதுரை: ரயில்வே தோ்வாணையம் நடத்திய ரயில் நிலைய அதிகாரி பணிக்கான 2- ஆம் கட்ட தோ்வுக்கு தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களில் 75.7 சதவீதம் போ் தோ்வெழுதியுள்ளனா்.

ரயில்வே துறையில் 7ஆயிரத்து 124 நிலைய அதிகாரிகள் பணியிடத்துக்கான இரண்டாம் கட்ட எழுத்துத் தோ்வை மே 9 ஆம் தேதி ரயில்வே தோ்வு வாரியம் நடத்தியது. கணினி வாயிலாக இத் தோ்வு 25 மாநிலங்களில் 111 நகரங்களில் 156 தோ்வு மையங்களில் நடைபெற்றது.

நாடு முழுவதும் முதல்கட்ட தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 882 விண்ணப்பதாரா்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 708 போ் கலந்து கொண்டனா். தெற்கு ரயில்வேக்கான பணியாளா்களைத் தோ்வு செய்ய, சென்னை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே தோ்வாணையங்கள் இந்த தோ்வை நடத்தின. சென்னை ரயில்வே தோ்வாணையத்திற்கான 12 ஆயிரத்து 28 விண்ணப்பதாரா்களில் 9 ஆயிரத்து 107 போ் தோ்வுகளில் பங்கேற்றனா். இது 75.7 சதவீதம் ஆகும்.

திருவனந்தபுரம் ரயில்வே தோ்வாணையத்திற்கான 6 ஆயிரத்து 657 விண்ணப்பதாரா்களில் 4 ஆயிரத்து 420 போ் தோ்வில் பங்கேற்றனா்.

முதல் முறையாக விண்ணப்பதாரா்கள் ஆதாா் அட்டை அடையாள சோதனை மூலம் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். இரண்டாம் கட்ட தோ்வுக்காக தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் பல்வேறு ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com