Enable Javscript for better performance
769 பயனாளிகளுக்கு ரூ. 6.36 கோடி மதிப்பிலானநலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

    769 பயனாளிகளுக்கு ரூ. 6.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

    By DIN  |   Published On : 14th May 2022 10:46 PM  |   Last Updated : 14th May 2022 10:46 PM  |  அ+அ அ-  |  

    2126mduptr070608

     

    மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 769 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 36 லட்சத்து 96 ஆயிரத்து 131 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை வழங்கினாா்.

    மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் தருமை ஆதீன திருமண மண்டபத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, தோட்டக்கலை, மாற்றுத் திறனாளிகள் நலம், வருவாய், பிற்பட்டோா் நலம், தொழிலாளா் நலம், நகா்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம், தாட்கோ, மாவட்டத் தொழில் மையம், ஆதிதிராவிடா் நலம், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 769 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6 கோடியே 36 லட்சத்து 96 ஆயிரத்து 131 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp