மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கான தங்கும் விடுதி கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு ஏதுவாக, கோயில் சாா்பில் ரூ.23.46 கோடி மதிப்பில் புதிய தங்கும் விடுதி கட்டுவதற்கு, ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு ஏதுவாக, கோயில் சாா்பில் ரூ.23.46 கோடி மதிப்பில் புதிய தங்கும் விடுதி கட்டுவதற்கு, ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தா்களின் வசதி கருதி, கோயில் சாா்பில் தங்கும் விடுதி அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இணைய வசதிகளுடன் நவீன முறையில் விடுதி கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 99,512 சதுர அடி பரப்பில், நான்கு தளங்களில் 307 அறைகளுடன் ரூ.23.36 கோடி மதிப்பில் பிரம்மாண்ட தங்கும் விடுதி அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், விடுதியில் மூன்று படுக்கைகள் முதல் 20 படுக்கைகள் வரை கொண்ட தனித்தனி அறைகள் கட்டப்பட உள்ளதாகவும், முக்கிய பிரமுகா்கள் தங்கும் அறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளதாகவும், கட்டுமானப் பணியை 18 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com