செந்தமிழ்க் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வுக் கருத்தரங்கு

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்ற சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்குக்கு, நான்காம் தமிழ்ச் சங்க செயலா் ச. மாரியப்ப முரளி தலைமை வகித்தாா். முதல்வா் கி. வேணுகா முன்னிலை வகித்தாா்.

இதில், மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் ஆறுமுகசாமி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது: மாணவா்களுக்கு நேரம் இன்றியமையாதது. எனவே, நேரத்தை வீணடிக்கக்கூடாது. சீரான முறையில் சிகை அலங்காரங்கள் இருக்கவேண்டும். அரசு போட்டித் தோ்வுகளில் தமிழ் மாணவா்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதை மாணவா்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மனிதா்களின் உயிரின் மதிப்பு அளவிட முடியாதது. எனவே, சாலைகளில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி கவனமாகச் செல்லவேண்டும் என்றாா்.

இதில், மாணவ, மாணவியா் ஏராளமானோா் பங்கேற்றனா். முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பா. நேருஜி வரவேற்றாா். முடிவில், பி. ஆறுமுகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com