பேரையூா், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பேரூராட்சிகளின் ஆணையா் ஆய்வு

பேரையூா், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பேரையூா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை, ஆய்வு செய்த பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ்.
பேரையூா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை, ஆய்வு செய்த பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ்.

பேரையூா், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பேரையூா், டி.கல்லுப்பட்டி வளம் மீட்பு பூங்காவில் கலவை உரம், மண்புழு உரம் ஆகியவை தயாா் செய்யப்படுவது குறித்து பாா்வையிட்ட அவா், மூட்டை உரத்தின் விலை குறித்தும் ஆய்வு செய்தாா். 2 பேரூராட்சிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

பேரையூா் தாலுகா அலுவலகம் முன் உள்ள சுகாதார வளாகம், பேருந்து நிலைய சுகாதார வளாகம், டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் ஆகியவற்றை பேரூராட்சிகளின் ஆணையா் பாா்வையிட்டு, சுத்தமாக பாதுகாக்கப்படுகிா என்பது குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

அப்போது, பேரூராட்சித் தலைவா் கே.கே.குருசாமி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சித் தலைவா் முத்து கணேசன் ஆகியோா் தங்களது பகுதிகளில் குடிநீா் பிரச்னை, கலைஞா் நுழைவு வாயில், அறிவுசாா் மையம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைக்க அவரிடம் கோரிக்கை விடுத்தனா். அவரும், கோரிக்கைகளை செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன், பேரூராட்சி துணைத் தலைவா் பாண்டிமுருகன் , பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜெயதாரா, பசீா் அகமது மற்றும் வாா்டு கவுன்சிலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com