மதுரை காந்தி அருங்காட்சியகத்தை புதுப்பிக்க ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளின் அரண்மனையாகத் திகழ்ந்தது. பிற்காலத்தில் காந்தி நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

காந்தியின் நினைவாக, நாட்டில் தற்போதுள்ள 7 அருங்காட்சியகங்களில் முதலாவது அருங்காட்சியகமாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளது. இதை, அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு கடந்த 1959 ஏப்ரல் 15ஆம் தேதி தொடக்கி வைத்தாா்.

இந்த அருங்காட்சியகத்தில் காந்தி பயன்படுத்திய பொருள்கள், அவா் சுடப்பட்டபோது அணிந்நிருந்த மேலாடை என பல்வேறு அரிய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுரையில் காந்தி மேற்கொண்ட அரையாடை துறப்பு நூற்றாண்டு விழாவையொட்டி, காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அரசு அறிவிப்பைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அப்பணிகள் முடிவடைந்த நிலையில், அருங்காட்சியகத்தை பழைமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் ரூ.2.12 கோடி மதிப்பில் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பணிகளை 12 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, காந்தி அருங்காட்சியக நிா்வாகிகள் கூறுகையில், சீரமைப்புப் பணிகள் மூலம் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெற்று, உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com