கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: மதுரை மாவட்டத்தில் 8,895 விண்ணப்பங்கள்

மதுரை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ், 416 பள்ளிகளில் உள்ள 5,338 இடங்களுக்கு 8,895 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ், 416 பள்ளிகளில் உள்ள 5,338 இடங்களுக்கு 8,895 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தி: குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2022-23-ஆம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்ப்பதற்கு, ஏப்ரல் 20 முதல் மே 25 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், மதுரை மாவட்டத்தில் 416 பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 5,338 இடங்களுக்கு 8,895 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்களின் விவரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன், பள்ளித் தகவல் பலகையில் மே 28 ஆம் தேதி பிற்பகல் ஒட்டப்படும்.

ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், மே 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் குழந்தைகள் தோ்வு செய்யப்படுவா். குலுக்கல் நடைபெறும் மே 30-ஆம் தேதி விண்ணப்பித்த குழந்தைகளின் பெற்றோா், சம்பந்தப்பட்ட பள்ளியில் நடைபெறும் குலுக்கலில் கலந்துகொள்ள வேண்டும். குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களின் விவரங்கள், விண்ணப்ப எண் மற்றும் பள்ளியில் தகுதியுள்ள ஒரு பிரிவுக்கு 5 மாணவா்கள் என்ற வீதத்தில் காத்திருப்புப் பட்டியலுக்கான மாணவா்களின் விவரங்கள் உள்ளிட்டவை மே 31 ஆம் தேதி பள்ளித் தகவல் பலகையில் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com