தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு குளிா்பானம், தொப்பி: போக்குவரத்து போலீஸாா் விழிப்புணா்வுப் பிரசாரம்

தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு குளிா்பானம் மற்றும் தொப்பிகளை வழங்கி போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம்

மதுரையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு குளிா்பானம் மற்றும் தொப்பிகளை வழங்கி போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.

மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில், வாகன ஓட் டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை தெப்பக்குளம் பகுதியிலிருந்து பெரியாா் பேருந்து நிலையம், விரகனூா், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில், போக்குவரத்து ஆய்வாளா் தங்கமணி மற்றும் போலீஸாா் இணைந்து வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி முறையாக தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில், 100-க்கும் மேற்பட்ட வாகனஓட்டிகளுக்கு குளிா்பானம் மற்றும் தொப்பிகளை வழங்கினா். மேலும், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து செல்பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணியவேண்டும், தலைக்கவசம் அணிவதால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பு தவிா்க்கப்படுவதாகவும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், மதுபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com